search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மோட்டார் சைக்கிள் விபத்து"

    • பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் திருமணத்துக்கு சென்ற பெண் பலியானார்.
    • அவர்களை பொதுமக்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே புலிப்பட்டியை சேர்ந்தவர் வீரணன் (40). இவர் கீழவளவு அருகே சருகு வலையபட்டியில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்காக தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது திருவாதவூரை சேர்ந்த உறவு பெண் சின்னப்பொண்ணு என்பவரை தன்னுடன் அழைத்துச் சென்றுள்ளார்.

    அவர்கள் மேலூர் அருகே கீழையூர் என்ற இடத்தில் சென்றபோது முன்னால் சென்ற காரை முந்த முயன்றனர். அப்போது எதிரே வந்த அரசு பஸ் மீது ேமாட்டார் சைக்கிள் மோதியது. இதில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை பொதுமக்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சின்னப்பொண்ணு பரிதாபமாக இறந்தார்.

    இந்த விபத்து குறித்து மேலூர் டி.எஸ்.பி. ஆர்லியஸ் ரெபோனி, இன்ஸ்பெக்டர் சார்லஸ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
    • தக்கலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    தக்கலை அருகே உள்ள திருவிதாங்கோடு மல்லன் விளையைச் சேர்ந்தவர் அனீஸ் (வயது 29.

    இவர் கடந்த மாதம் 3-ந் தேதி தனது நண்பர் கோட்டுவிளையைச் சேர்ந்த ரெஜின் (21) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் தக்கலை நோக்கிச் சென்றார்.

    கேரளபுரம் இசக்கி யம்மன் கோவில் அருகே சென்ற போது, எதிரே தக்கலை மக்காபாளையம் சாகுல் அமீது என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்து உள்ளார்.

    எதிர்பாராதவிதமாக 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. அப்போது அங்கு வந்த கேரளபுரம் கண்ணன் மோட்டார் சைக்கிளும் இந்த விபத்தில் சிக்கியது.

    இதில் அனீஸ், சாகுல் அமீது, கண்ணன் ஆகியோர் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக நாகர்கோவில் ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    விபத்து குறித்து சாகுல் அமீது கொடுத்த புகாரின் பேரில், தக்கலை போலீ சார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்த அனீஸ் இன்று காலை பரிதாபமாக இறந்தார்.


    உடன்குடி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பலத்த காயம் அடைந்த பூக்கடைகாரர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    உடன்குடி:

    ஆறுமுகநேரியைச் சேர்ந்தவர் மகராஜன் (வயது 33). இவர் குரும்பூரில் பூக்கடை நடத்தி வந்தார். இவருக்கு திருமணமாகி வனப்பிரியா என்ற மனைவியும், 3 குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்று இவரது உறவினர் சத்யராஜ் என்பவருடன் உடன்குடி அருகே உள்ள குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன்கோவிலுக்கு சாமி கும்பிட மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்கள் கல்லாமொழி அருகே வந்த போது உடன்குடி பதுவைநகரைச் சேர்ந்த ஜேசுராஜ் (35) என்பவரது பைக் நேருக்கு நேர் மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட மகராஜன் பலத்த காயமடைந்தார். அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். 

    இதுகுறித்து குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதிய விபத்தில் வியாபாரி பலியானார்.

    பேரையூர்:

    விருதுநகர் மாவட்டம், மந்திரி ஓடை பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்கருப்பன் (வயது 42). விறகு கடை நடத்தி வந்தார். இவரது நண்பர் கணேசன் (42) ஆடு வியாபாரி.

    நேற்று 2 பேரும் ஆடு வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர். திருமங்கலம் அருகே உள்ள பாரபத்தியில் ஆடுகளை வாங்கிவிட்டு மீண்டும் ஊருக்கு புறப்பட்டனர்.

    அவர்கள் 4 வழிச் சாலையை கடக்க முயன்ற போது அந்த வழியே அருப்புக்கோட்டை- சென்னை இடையேயான தனியார் பஸ் வந்தது. அந்த பஸ் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதே விபத்தில் முத்துக்கருப்பன் மற்றும் கணேசன் தூக்கி வீசப்பட்டனர். சாலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்க முயன்றனர்.

    ஆனால் சம்பவ இடத்திலேயே முத்துக்கருப்பன் பரிதாபமாக இறந்தார். கணேசன் காயத்துடன் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. விபத்து குறித்து கூடக்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பலியான முத்துக்கருப்பனுக்கு, மகாலட்சுமி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    கோபி அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற தொழிலாளி பள்ளத்தில் விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    கோபி:

    கோபி அடுத்த கரட்டூர் மேடு அத்தாணியை சேர்ந்தவர் முத்துசாமி(வயது 42) கட்டிடத் தொழிலாளி. இவர் நேற்று இரவு தனது மோட்டார் சைக்கிளில் அரசூர்-நம்பியூர் ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது திடீரென நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளுடன் ரோட்டரோம் உள்ள பள்ளத்தில் தவறி விழுந்தார். அந்த பள்ளத்தில் தண்ணீர் சென்று கொண்டிருந்தது.

    இதில் முத்துசாமி சம்பவ இடத்திலேயே தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

    இது பற்றி தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்துக்கு போலீசார் சென்று, முத்துசாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

    மேலும் இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரனை நடத்தி வருகிறார்கள்.

    தோவாளையில் மோட்டார் சைக்கிள் பாலத்தில் மோதி 4 அடி பள்ளத்தில் பாய்ந்த விபத்தில் புது மாப்பிள்ளை பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    ஆரல்வாய்மொழி:

    ராஜாக்கமங்கலம் அருகே பழவிளை பூவன்குழியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவரது மகன் மணிபாரதி, (வயது 23). இவர், அந்த பகுதியில் உள்ள ஒர்க்ஷாப் ஒன்றில் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் திருமணம் நடக்கிறது. நேற்று காலை வேலைக்கு சென்ற மணிபாரதி இரவு தனது ஒர்க்ஷாப்பில் வேலை பார்க்கும் தர்மபுரத்தைச் சேர்ந்த பிரபாகரன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் குமாரபுரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றனர்.

    மோட்டார் சைக்கிளை மணிபாரதி ஓட்டினார். பிரபாகரன் பின்னால் அமர்ந்திருந்தார். தோவாளை அருகே விசுவாசபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மணிபாரதியின் கட்டுப்பாட்டை இழந்து அந்த பகுதியில் புதியதாக கட்டப்பட்டு வரும் பாலத்தின் கரை பகுதியில் 4 அடி பள்ளத்தில் பாய்ந்தது.

    இதில், மணிபாரதியின் தலை பாலத்தில் பலமாக இடித்ததில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பிரபாகரன் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். 

    விபத்து குறித்து தகவல் அறிந்ததும் நெடுஞ்சாலை ரோந்து படை போலீசாரும், ஆரல்வாய்மொழி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு பிணமாக கிடந்த மணிபாரதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மணிபாரதி பலியான தகவல் அவரது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். விபத்து குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மணவாளக்குறிச்சி படர்நிலத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர், (வயது 55). இவர் தனது மோட்டார் சைக்கிளை மணவாளக்குறிச்சி பகுதியில் வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த வேன் ஒன்றின் கதவை டிரைவர் ரமேஷ் திறந்தார்.

    எதிர்பாராத விதமாக சந்திரசேகர் அந்த வேன் கதவின் மீது மோதி கீழே விழுந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோ ஒன்று சந்திரசேகர் மீது மோதியது. இதில், படுகாயம் அடைந்த சந்திரசேகர் பரிதாபமாக இறந்தார். காயமடைந்த ஆட்டோ டிரைவர் செல்வக்குமார் நாகர்கோவிலில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து மணவாளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமேசை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×